உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கார் - டூவீலர் மோதல்; ஒருவர் பலிசிங்கம்புணரி: மாதவராயன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலமுருகன் 45. இவர் உறவினர் கார்த்தி 35 என்பவருடன் ஜூன் 18 ம் தேதி இரவு 9:00 மணிக்கு செம்மணிப்பட்டியில் இருந்து மாதவராயன்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். எஸ்.எஸ்.கோட்டை போஸ்ட் ஆபீஸ் அருகில் வந்த போது எதிரில் வந்த கார் மீது டூவீலர் மோதியதில் டூவீலரை ஓட்டிய பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கார்த்திக் காயமடைந்தார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தற்கொலைமானாமதுரை: பதினெட்டாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா 26, இவர் வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்ததை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேசிங்கு ராஜா விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.* மானாமதுரை அருகே உள்ள வளநாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி சாந்தி 38, இவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி