உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் பிரதோஷ விழா

திருப்புத்துாரில் பிரதோஷ விழா

திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி பிரகாரம் வலம் வந்தது.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 4:30 மணிக்கு கொடிமரம் அருகில் நந்தி தேவருக்கும், மூலவர் சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவ பிரதோஷ நாயகர், சிவகாமி அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. *மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை வலம் வந்தனர்.*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ