உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலைப்பணியாளர் சங்க கூட்டம்

சாலைப்பணியாளர் சங்க கூட்டம்

சிவகங்கை, : சிவகங்கையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் சதுரகிரி அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில பொருளாளர் தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் பேசினர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் சின்னப்பன், கணேசன், பாலசுப்பிரமணியன், வீரையா, சிவக்குமார், பாண்டி, சுதந்திரமணி, ராஜா, பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ