உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை: 33 பவுன் நகை மீட்பு: ஒருவர் கைது

போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை: 33 பவுன் நகை மீட்பு: ஒருவர் கைது

மானாமதுரை:மானாமதுரை ஜீவா நகரில் போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்து 33 பவுன் நகைகளை மீட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர். மானாமதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் மருதுபாண்டி மதுராந்தகத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு சிலர் வீட்டின் கதவை உடைத்து டிவி.,க்கு பின்புறம் இருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த 43 பவுன் நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சிறப்பு எஸ்.ஐ., நாகராஜன், போலீசார் கொள்ளையர்களை தேடினர்.நேற்று எம்.கரிசல்குளம் சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக டூவீலரில் வந்த சிவகங்கை கீழக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கலையரசன்42, என்பவர் போலீசாரை கண்டதும் தப்ப முயற்சி செய்தார். அவரை போலீசார் பிடித்து அவரை சோதனை செய்தபோது முத்து என்பவரது வீட்டில் கொள்ளைடிக்கப்பட்ட 33 பவுன் தங்க நகைகளை வைத்திருந்ததை அறிந்து அவரை கைது செய்து நகைகளை மீட்டனர். கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலரையும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 10 பவுன் நகைகளோடு மாயமான இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சூடியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் 19, அவரது தாயார் செல்வி மற்றும் ஏனாதி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தன மகாலிங்கம் 27, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ