மேலும் செய்திகள்
பஸ் கண்ணாடி சேதம் கண்டக்டர் மீது வழக்கு
28-Aug-2024
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே அரசு பஸ்சும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து எஸ்.புதுார் வழியாக துவரங்குறிச்சிக்கு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. புழுதிபட்டி அருகே மனப்பட்டியில் எதிரே எம்-சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் கண்ணாடி உடைந்து முன்புறம் சேதம் அடைந்தது. கண்டக்டர் மற்றும் பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Aug-2024