டூவீலரில் சரஸ்வதி சிலை கடத்தியவர் கைது
தேவகோட்டை ; வேலாயுதபட்டிணம் ஸ்டேஷன் போலீசார், பாவனக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணங்கோட்டை அருகே நாச்சியாபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சிங்கமுத்து 46, வந்த டூவீலரில் சோதனை செய்தனர். டூவீலரில் 2 அடி உயர வெண்கல சரஸ்வதி சிலை இருந்தது. கொல்லங்குடியில் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி வருவதாக தெரிவித்தார்.முன்னுக்கு பின் முரணான தகவல் தந்ததால் சிங்கமுத்துவை கைது செய்து, சரஸ்வதி சிலையை பறிமுதல் செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.