உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம்; முகூர்த்தக்கால் நடும் விழா

சாத்தையனார் கோயில் கும்பாபிஷேகம்; முகூர்த்தக்கால் நடும் விழா

இளையான்குடி : இளையான்குடி அருகே சாத்தனூர் மகா சாத்தையனார் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோயிலில் கும்பாபிேஷகத்திற்கான கோயில் புனரமைப்பு பணி நடந்தது. ஜூலை 3 ல் இக்கோயில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.இதற்காக ஜூலை 1ல் கணபதி ேஹாமம், முதல் கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜூலை 3ம் தேதி காலை 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.கும்பாபிேஷகத்திற்காக நேற்று கோயில் முன் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் மகா சாத்தையனாருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய அபிேஷகம் நடந்தது. சாத்தனுார் கிராம மக்கள் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ