உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 

முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 

சிவகங்கை:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கால அவகாசம் செப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளாக செப்., மற்றும் அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளன. மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வீரர்களிடம் இருந்து முதலில் ஆக., 25 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனால், வீரர்கள் பதிவதில் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். வீரர்களிடம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும், இணையதள பிரச்னையால் உரிய நேரத்தில் பதிய முடியாத நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க ''www.sdat.tn.gov.in'' என்ற இணையதளத்தில் செப்., 2 வரை முன்பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை