உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் தொடர் திருட்டு

தேவகோட்டையில் தொடர் திருட்டு

தேவகோட்டை: தேவகோட் டையில் நேற்று முன் தினம் ஆசிரியை சீதாலட்சுமி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் பட்டபகலில் வீட்டு கதவை உடைத்து ரூபாய் 28 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.திருடர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வாரச்சந்தை அருகே ஞானானந்த கிரி நகரில் ராஜாமணி என்பவர் வீட்டில் 16 பவுன் தங்க நகை மற்றும் பணமும் திருடப்பட்டுள்ளது.கடந்த மாதம் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 200 பவுன் திருட்டு நடந்து சிசி டிவி பதிவை வைத்து ஒரு வாரத்திற்குள் கொள்ளையர்கள் சிக்கினர். இந்த சூழ்நிலையில் மீண்டும் கொள்ளை நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளை நடந்த பகுதி சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த பகுதியில் ஒரு டூவீலர் வந்து சென்றது முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை