மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் தைப்பூச விழா
12-Feb-2025
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் சத்சாய் சேவா சமிதியில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அனுக்கை மற்றும் விநாயகர் பூஜையுடன் சிவராத்திரி விழா தொடங்கியது.தொடர்ந்து இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:00 மணி வரை, பொதுமக்கள் உட்பட பலரும் சாய் லிங்கோத்பவருக்கு அபிஷேகம் செய்தனர்.ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஸ்ரீ சத்ய சேவா மாவட்டத் தலைவர் சுவாமிநாதன், சமிதி கன்வீனர் திருநாவுக்கரசு மற்றும் சமீதி உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
12-Feb-2025