உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி, தங்க பொருள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி, தங்க பொருள் திருட்டு

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் அருகே பி.கருங்குளத்தில் ஒரே நாளில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து வெள்ளி, தங்க பொருட்களை திருடி சென்றுள்ளனர்.சென்னை வடபழனியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வைரவன் 74.இவருக்கு சொந்தமாக பி.கருங்குளத்தில் வீடு உள்ளது. இவரது வீட்டில் சனிக்கிழமை இரவு சிலர் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 2 பவுன் தங்க செயின்,ரூ.20 ஆயிரம்,650 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.அன்று இரவே அதே ஊரில் சென்னையில் உள்ள நாச்சியப்பன் வீட்டிலும் 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை