உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை தினசரி சந்தை ஏலம்

சிவகங்கை தினசரி சந்தை ஏலம்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள தினசரி சந்தை ஏலம் வைப்புத்தொகை அதிகம் என்பதால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.சிவகங்கை நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்டுவதற்காக கட்டுமான பணி நடந்தது. வாகனம் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டுஉள்ள கடைகளை பிப்.6, 18, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு கடைக்கு வைப்புத்தொகையாக ரூ. ஒரு லட்சம் செலுத்த வேண்டுமென முதல் 2 ஏலத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல் 2 ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்வில்லை. இதனால் வைப்புத் தொகை ரூ.50 ஆயிரமாக குறைத்து ஏலம் அறிவிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 5ல் நடந்த ஏலத்திலும் வியாபாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் மூன்று முறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் 3.49 கோடியில் கடைகள் கட்டியும் வியாபாரிகள் ஏலம் எடுக்க வராததால் நகராட்சிக்கு தற்போது இழப்பு தான் ஏற்பட்டுள்ளது.வியாபாரிகள் கூறுகையில், கடைகள் முறையான திட்டம் இல்லாமல் சிறியதாக கட்டப்பட்டுள்ளது. பொருட்களை வைப்பதற்கு இடவசதி இல்லை. தினசரி சந்தையில் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரைதான் வியாபாரம் இருக்கும். இதற்கு ரூ.ஒரு லட்சம், 50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி மாத வாடகை செலுத்துவது சிரமம். இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்றனர்.கமிஷனர் கிருஷ்ணராம் கூறுகையில், ஏலம் தேதி அறிவித்தும் யாரும் ஏலம் எடுக்க வரவில்லை. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை