உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் தேர்பவனி  இன்று காலை கொடியிறக்கம்  

சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் தேர்பவனி  இன்று காலை கொடியிறக்கம்  

சிவகங்கை : சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச் திருவிழா தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. இன்று காலை 7:30 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்படும்.சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச்சில் ஆக., 6 ம் தேதி கொடியேற்றம், சிறப்பு திருப்பலியுடன் திருவிழா தொடங்கியது. ஆக., 7 முதல் 13 ம் தேதி வரை மாலை 6:00 மணிக்கு திருச்செபமாலை, மாலை 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெற்றது. ஆக., 11 ல் புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளியில் திருப்பலியும், பேராலயம் நோக்கி நற்கருணை பவனி நடைபெற்றது. நேற்று மாலை 5:30 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் பிஷப் எஸ்.சூசைமாணிக்கம் திருப்பலி கருத்துக்கள் வாசித்தார். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் புனித அலங்கார அன்னை பவனி வந்தார்.பங்கு தந்தைகள் அருள்ஜோசப், பெனடிக்ட் பர்னபாஸ், சேவியர், கிளிண்டன், சேசு, இன்பென்ட், மரியடெல்லஸ், செபாஸ்டின், மரிய அந்தோணி, மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் பால்ராஜ், அருள் ஆனந்த், தைரியம் பங்கேற்றனர்.இறுதி நாளான இன்று காலை 7:30 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் நன்றி திருப்பலி நடத்தி, கிறிஸ்தவர்களுக்கு ஆசியுரை வழங்குகிறார். அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழா ஏற்பாட்டை பங்கு தந்தை சேசுராஜா, உதவி பங்கு தந்தை கிளிண்டன் மற்றும் பங்கு பேரவை, இறைமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி