உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை சார் - பதிவாளர் எழுத்தர் லஞ்ச வழக்கில் கைது

சிவகங்கை சார் - பதிவாளர் எழுத்தர் லஞ்ச வழக்கில் கைது

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கோளந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம், 52. ராணுவத்தில் பணிபுரிந்தார். தற்போது அந்தமானில் வசிக்கிறார். இவர், 2015ல் சிவகங்கை அருகே உள்ள அல்லுார் பனங்காடி சாலையில் உள்ள மூன்று வீட்டு மனைகளை திருப்புத்துார் சாலையில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்தார். அப்போது, தவறுதலாக இரண்டு வீட்டு மனைகளுக்கு மட்டும் பதிவு செய்தார்.மூன்றாவது மனையை திருத்தப் பத்திரம் பதிவு செய்ய முயன்றார். இதற்காக அவர், சார் - பதிவாளர் எண் - 1 அலுவலகத்தின் எதிரே உள்ள பத்திர எழுத்தர் கண்ணன், 40, என்பவரை அணுகினார். கண்ணன் திருத்தப் பத்திரம் பதிவு செய்ய சார் - பதிவாளர் ஈஸ்வரனுக்கு 18,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார்.இதுகுறித்த புகாரின்படி, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 18,000 ரூபாயை அற்புதத்திடம் கொடுத்தனுப்பினர். பணத்தை பெற்ற கண்ணனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, சார் - பதிவாளர் ஈஸ்வரனையும் கைது செய்தனர். அவரிடமிருந்து, 9,800 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை