உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை அரசு உதவி பெறும் கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோலார் வில்லேஜ் பவுண்டேசன் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பொறுப்பு மீனாட்சி சுந்தரி வரவேற்றார். டாக்டர் சோலார் நாச்சியப்பன் ஸ்மார்ட் வகுப்பினை துவக்கி வைத்தார். பள்ளிச் செயலர் நாகராஜன், பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மேலாளர் சுப்பையா, நல்லாசிரியர் கண்ணப்பன், கனகராம், சம்பத், மோகனா, வள்ளியப்பன், கமலம், சங்கரன் கலந்துகொண்டனர். ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !