உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை  

சிவகங்கை: -இடையமேலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் சகாய புஷ்பராணி, அமுதா, கோமதி ஏற்பாட்டை செய்திருந்தனர். இப்பள்ளியில் 15 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டனர். பெற்றோர் சார்பில் பள்ளிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி