உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கயிறு தொழிற்சாலை துாசியால் மாணவர்கள் அவதி

கயிறு தொழிற்சாலை துாசியால் மாணவர்கள் அவதி

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஒன்றிய அலுவலகம், பள்ளிகள் செல்லும் ரோட்டில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் துாசியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.இப்பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், அரசு துவக்கப்பள்ளியும், அருகே தனியார் பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் கயிறு மற்றும் அதன் மூலப்பொருள் தயாரிப்பு கூடங்கள் செயல்படுகின்றன. துாசிகளை கட்டுப்படுத்த முறையான தடுப்புகளை அமைக்காததால் அப்பகுதியில் துாசி கிளம்புகிறது.அவ்வழியாக பள்ளிக்குச் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். வாகனங்களில் செல்லும் போது கண்களில் துாசி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே முறையான தடுப்பு அமைத்து துாசி வெளியேறாதவாறு தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ