உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சதுர்வேதமங்கலத்தில் தேங்கும் கழிவுநீரால் அவதி

சதுர்வேதமங்கலத்தில் தேங்கும் கழிவுநீரால் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்கு முன் தேங்கும் கழிவு நீரால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வூராட்சியில் குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வெளியேற முறையான கால்வாய் கட்டமைப்பு இல்லை. இக்கிராமத்தில் வீடுகள் முன் கழிவு நீர் நீண்ட நாட்கள் தேங்கிக் கிடக்கிறது.குறிப்பாக கிழக்குத்தெரு, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் வெளியேற வழி இல்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு அடிக்கடி பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது.காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவு நீர் ஊருக்குள்ளேயே தேங்கி கிடக்கிறது.இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த கழிவு நீரும் முறையாக வெளியேற உரிய கால்வாய்களை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ