உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாட்டர் டேங்க்கில் அகற்றிய நிழற்குடையால் அவதி

வாட்டர் டேங்க்கில் அகற்றிய நிழற்குடையால் அவதி

காரைக்குடி: காரைக்குடி வாட்டர் டேங்க் பஸ் ஸ்டாப்பில் அகற்றப்பட்ட பயணிகள்நிழற்குடையை மீண்டும்அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. காரைக்குடி பகுதியில் கழனிவாசல் தொடங்கி வாட்டர் டேங்க் வரை சாலையை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது. காரைக்குடி நகரின் முக்கிய பஸ் ஸ்டாப்பான வாட்டர் டேங்க், பஸ் ஸ்டாப்பிற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், வெளியூர் பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சாலை அகலப்படுத்தும்பணியின்போது, பயணிகள்நிழற்குடை அகற்றப்பட்டது. சாலைப்பணி முடிந்து ஓர் ஆண்டாகியும் மீண்டும் பயணிகளுக்கான நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பயணிகள் வெயில், மழையில் நின்றபடி பஸ்சுக்கு காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. தவிர, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மீண்டும் பயணிகள்நிழற்குடை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ