ஆசிரியர்கள் சஸ்பெண்ட் மாணவர்கள் போராட்டம்
மானாமதுரை:கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இரு ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் நிலவின. மாணவர்கள், பெற்றோர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம மக்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வந்ததை தொடர்ந்து விசாரணை நடந்தது. ஆசிரியர்கள் ராஜா, சாத்தையா இருவரையும் நேற்று முன்தினம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து நேற்று அவர்களிடம் படித்த 30 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி முன் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் கிருஷ்ணகுமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அதிகாரிகள் பேச்சு நடத்தி கலைந்து போக செய்தனர்.