ஆசிரியர் சங்க கூட்டம்
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் பங்கேற்றார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை நிர்வாகி பஞ்சு ராஜ், கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாநில அளவில் காஞ்சிபுரம் படப்பையில் மார்ச் 15 அன்று பெண் ஆசிரியர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழாவில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.