மேலும் செய்திகள்
சிறுவன் கொடூர கொலை உறவினர்கள் மறியல்
03-Sep-2024
பூச்சி மருந்து குடித்து தற்கொலை
08-Aug-2024
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த வாலிபர் கொலையில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கீழப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் பிரவீன்ராஜ் 18. இவரை செப்.1 இரவு தீயனுார் கண்மாய் பகுதியில் சிலர் வெட்டி கொலை செய்தனர். பிரவீன்ராஜ் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மதுரை -- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கீழப்பசலை விலக்கு அருகே மறியலில் ஈடுபட்டனர்.கொலையாளிகளை கண்டுபிடிக்க எஸ்.ஐ.,க்கள் நாகராஜ், சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று சங்கமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் சசிக்குமார் 23, சுரேஷ் மகன் தனுஷ், கணபதி மகன் சுதர்சன், ராமையா மகன் ரகுபதி, கிழங்காட்டூர் அமர்நாத் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் சசிக்குமாரை விரட்டி பிடித்த போது அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. அவரை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
03-Sep-2024
08-Aug-2024