மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
29-Aug-2024
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தில் ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டதை விலக்கி கொண்டனர்.மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட ஆவரங்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. ஆவரங்காடு கிராம விவசாயிகள் தரப்பில் ஊராட்சி தலைவர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் விஜயக்குமார்,காசிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். வருகிற செப்.20க்குள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கிருஷ்ணகுமார் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
29-Aug-2024