மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
5 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
5 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
5 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
5 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
5 hour(s) ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரசு மாதிரிப்பள்ளியில் கரடு முரடான விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தவிக்கின்றனர்.எஸ்.புதுார் ஒன்றியம் கட்டுக்குடிபட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மாதிரி பள்ளி கட்டப்பட்டது. இங்கு 12-ம் வகுப்பு வரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். பள்ளி அருகே உள்ள மேடு பள்ளமான இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சமப்படுத்தி கலையரங்கம் கட்டப்பட்டது. சில அடி துாரம் மட்டும் சமப்படுத்தப்பட்ட இடத்தில் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். காலியிடம் பெரிய அளவில் இருந்தும் அதை விளையாட்டு மைதானமாக சீரமைக்காததால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.முழு நிலத்தை சமப்படுத்தி விளையாட்டு மைதானம் அமைத்து தர பெற்றோர்களும், மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago