உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாணம்

ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாணம்

சிங்கம்புணரி : சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.குன்றக்குடி ஆதீனத்துக்குட்பட்ட இக்கோயிலில் மாசித்திருவிழா மார்ச் 3ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. காலை 9:30 மணிக்கு விநாயகர் சன்னதி முன் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் யாகபூஜை செய்யப்பட்டது. திருக்கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மார்ச் 11ஆம் தேதி மாசித் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி