உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி வகுப்பு துவக்கம்

பயிற்சி வகுப்பு துவக்கம்

திருப்புத்துார் : திருப்புத்துார் முத்தையா மெமோரியல் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட வகுப்புகள் துவக்கவிழா நடந்தது. தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் என்.வெங்கடேசன் வரவேற்றார். திருப்புத்துார் மண்டல துணைத்தாசில்தார் ஜி.மாரியப்பன் பங்கேற்றார்.பேராசிரியர்கள் சரவணன், மாணிக்க நாச்சியார், பாண்டிச் செல்வி, சவுமியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் ராம.சிவராம மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி