உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன்- டூவீலர் மோதலில் இருவர் பலி

வேன்- டூவீலர் மோதலில் இருவர் பலி

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேரளப்பூரில் வேன் மோதியதில் டூவீலரில் சென்ற இருவர் பலியாயினர்.கும்பகோணம் அருகே நீரக்கத்தநல்லுார் அப்பாத்துரை மகன் பழனிவேல் 44. நடராஜன் மகன் பிரகாஷ் 30. திருவாரூர் வேப்பத்துார் சேகர் மகன் முத்துக்கிருஷ்ணன் 37. இவர்கள் மூவரும் தேவகோட்டை அருகே கண்ணங்குடி பகுதி விவசாய நிலங்களில் வைக்கோல் வாங்குவதற்காக, டூவீலரில் நேற்று காலை சென்றனர்.7:00 மணிக்கு கண்ணங்குடியில் இருந்து தேவகோட்டைக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த வேன், தேரளப்பூர் ஞானஒளிபுரம் அருகே டூவீலரில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே டூவீலரில் வந்த பழனிவேல், முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தனர். பிரகாஷ் படுகாயமுற்றார். வேனில் வந்த பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பில்லை. சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., கவுதம் விசாரித்தார். வேன் டிரைவர் கண்ணங்குடி ராமலிங்கம் மகன் சுப்பிரமணியனை 39, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ