மேலும் செய்திகள்
முதல்வர் மம்தா அரசுக்கு நெருக்கடி
20-Aug-2024
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் அருகே உள்ள வீரன்திடல் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா, அதே ஊரைச் சேர்ந்த அஜீத் இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர்.இத்திருமணத்திற்கு அஜீத் நண்பர்களான தெற்கு கீரனுாரை சேர்ந்த நல்லசேதுபதி 28,சாலைக்கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் 24, ஆகியோர் தான் காரணம் என கருதி சங்கீதாவின் உறவினர்களான சாலைக் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் மகன்கள் ஹரிஷ் 25,ராகுல் 28,மற்றும் சாலைக்கிராமம் தலைநகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ் 21, மூவரும் நேற்று முன்தினம் இரவு சாலைக்கிராமம் பகுதியில் உள்ள பேக்கரி எதிர்புறம் நின்று கொண்டிருந்த நல்லசேதுபதி, உதயகுமார் 24, ஆகியோரை கத்தியால் தாக்கி விட்டு தப்பி விட்டனர். நல்லசேதுபதி புகாரின் பேரில் சாலைக்கிராமம் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
20-Aug-2024