உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் காரைக்குடியில் பாதாள சாக்கடை வரி

இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் காரைக்குடியில் பாதாள சாக்கடை வரி

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கும் வரி கட்டுமாறு நோட்டீஸ் வழங்கியதால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.காரைக்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2017 ஆம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 32 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு முதலாவதாக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 7 ஆயிரத்து 250 குடியிருப்புகளுக்கு குழாய் இணைக்கும் பணி நடந்தது. இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் நகர், ரயில்வே ரோடு உட்பட பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கு வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் வழங்கியதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் சித்ரா கூறுகையில்:முதல் கட்டமாக, 7 ஆயிரத்து 250 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கான்ட்ராக்ட் விடப்பட்டது. கான்ட்ராக்டர்கள் வழங்கிய, இணைப்பு பட்டியலின் அடிப்படையில் தான் பில் தயார் செய்யப்பட்டது. வரி வசூலுக்கு சென்றபோது தான் குழப்பம் இருப்பது தெரிய வந்துள்ளது . இணைப்பு வழங்காத வீடுகள், இணைப்பு வழங்கப்பட்ட வீடுகள் குறித்து முறையான பட்டியல் வழங்கவில்லை. ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !