உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சர்வீஸுக்கு சென்ற வாகனம்; பாதுகாப்பு பணியில் சிக்கல்

சர்வீஸுக்கு சென்ற வாகனம்; பாதுகாப்பு பணியில் சிக்கல்

காரைக்குடி : காரைக்குடியில் பயன்பாட்டில் இருந்த ரோந்து வாகனங்கள் சர்வீஸுக்கு சென்று 4 மாதமாகியும் திரும்ப வராததால் குற்றம்சம்பவங்களை தடுப்பதிலும், பாதுகாப்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.காரைக்குடியில் நிலவும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும்,மக்களின் பாதுகாப்புக்கும் நகர் மற்றும் நெடுஞ்சாலைகளில் போலீஸ் ரோந்து வாகனங்கள் செயல்படுகின்றன. காரைக்குடி கோவிலுார் பர்மா காலனி நெசவாளர்காலனி உட்பட பல பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து வாகனம் செயல்பட்டது. இந்த ரோந்து வாகன படிகள் கதவு அடிப்பகுதி துருப்பிடித்து சிதைந்த நிலையில் இருந்தது. ரோந்து வாகனமும் நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டது.ஆனால் இதுவரை பணிமுடிந்து இரு வாகனங்களும் மீண்டும் கொண்டு வரப்படவில்லை. இதனால்போலீசார் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடத்திற்கும் விபத்து நடைபெறும் இடங்களுக்கும் பைக்கில் செல்ல வேண்டியுள்ளது. பராமரிப்பு பணிக்கு சென்ற வாகனங்களை விரைந்து எடுத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை