உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பு பணி

மானாமதுரை விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பு பணி

மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் அதனை ஒட்டி உள்ள விரிவாக்க பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு 38. 86 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.தற்போது மானாமதுரை நகராட்சியில் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிதாக குழாய்கள் பதிக்கும் பணியும், நகராட்சியை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ