உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் சிலைகளுக்கு வரவேற்பு

கோயில் சிலைகளுக்கு வரவேற்பு

திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் காட்டாம்பூர் தர்ம புல்லனி அய்யனார் கோயில் திருப்பணியை முன்னிட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய சுவாமி சிலைகளுக்கு கிராமத்தினர் வரவேற்பு அளித்தனர். இக்கோயிலை புனரமைக்க 23 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி துவக்கப்பட்டது. தற்போது திருப்பணி நிறைவடைந்து வைகாசியில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயிலுக்குள் எழுந்தருள புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனார், சின்னகருப்பர், பெரியகருப்பர், பத்திரகாளி அம்மன், பேச்சியம்மன், மூலமலையாண்டி, சன்னாசி, பட்டவன், முன்னோடி, வாசப்பிரியாணி, லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், கன்னி மூல கணபதி, நர்த்தன கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், நாகர், துவார பாலகர், சப்த கன்னிமார்கள், பலிபீடம், யானை ஆகிய 27 சிற்பங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. சிலைகளை வரவேற்க திருப்புத்துார் வந்த கிராமத்தினர் திருத்தளிநாதர் கோயிலில் வழிபட்ட பின்னர் ஊர்வலமாக சென்று சிலைகளை வரவேற்று கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஆகம விதிப்படி 48 நாள் நீரிலும், தானியத்திலும், சயன வாசத்திலும் சிலைகள் வைக்கப்பட்டு அதன் பின்பு கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை