உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு   

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு   

சிவகங்கை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம், குடும்ப நல சேவையின் முக்கியத்துவம் குறித்த முகாம் ஜூன் 27 முதல் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.குடும்ப நல சேவை வழங்கப்படாததால், கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரித்து, மகப்பேறு மரணம், நோயுற்ற தன்மை, குழந்தை நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடும்ப நல சேவைகள் குறித்த ஆலோசனை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 21 வயதில் திருமணம் மற்றும் இரு குழந்தைகளுக்கு இடையே உரிய இடைவெளி தாய், குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.உலக மக்கள் தொகை பிரசாரத்தின் மூலம் மாவட்டத்தில் விழிப்புணர்வை அதிகரித்தல், முன்முயற்சி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பது இந்த ஆண்டு மக்கள் தொகை தின முழக்கமாகும்.எனவே ஜூன் 27 முதல் ஜூலை 10 ம் தேதி வரை மாவட்ட அளவில் உலக மக்கள் தொகை தின பிரசாரங்களில் மக்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற வேண்டும். ஜூலை 11 முதல் 24 வரை தீவிர குடும்ப நல சேவை முகாம் காலத்தில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை