உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் கழிவுநீரால் 100 ஏக்கர் கண்மாய் பாதிப்பு! பாசனத்திற்கு நீரின்றி பொய்த்துப்போன விவசாயம்

காரைக்குடியில் கழிவுநீரால் 100 ஏக்கர் கண்மாய் பாதிப்பு! பாசனத்திற்கு நீரின்றி பொய்த்துப்போன விவசாயம்

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி கண்மாயில் கழிவு நீர் கலந்து கண்மாய் வீணாகி வருவதால், பாசன வசதிக்கு தண்ணீரின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடிக்கு உட்பட்ட சாக்கோட்டை ஒன்றியத்தில் 4,500 எக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி அருகே உள்ள இடையன், அரியக்குடி ஆகிய இரு கண்மாய்கள் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயில் உள்ள 5 மடைகள் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர். ரயில்வே பீடர் ரோடு, காளவாய் பொட்டல், முத்துராமலிங்க தேவர் நகர் ஆகிய பகுதி வரத்து கால்வாய்கள் மூலம் மழை நீர் கண்மாயில் சேகரமாகிறது. கண்மாய்க்கு முக்கிய நீராதாரமான இக்கால்வாயில் காரைக்குடி செஞ்சை பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் செல்கிறது. இதனால் கண்மாய் முழுவதும் கழிவுநீர் தேங்கி விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் விவசாயிகள் பாசன வசதிக்கு நீரின்றி விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். விவசாய நிலங்களில் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே பொதுப்பணித்துறையினர் வரத்து கால்வாய்களை துார்வாரி, சாக்கடை கழிவு நீர் வருதை தடுக்க வேண்டும். உட்பரப்பையும் துார்வாரி, முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை