உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் 102, 108 ஆம்புலன்ஸ் பணிக்கு பிப். 22ல் நேர்முக தேர்வு

சிவகங்கையில் 102, 108 ஆம்புலன்ஸ் பணிக்கு பிப். 22ல் நேர்முக தேர்வு

சிவகங்கை: மாவட்டத்தில் 102 மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆலோசகர் பணிக்கு நாளை (பிப்.,22) சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் நேர்முக தேர்வு நடைபெறும்.102 ஆம்புலன்சில் சுகாதார ஆலோசகராக சேர பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் மாத சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும்.ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 24 முதல் 35க்குள், உயரம் 162.5 செ.,மீ., இருத்தல் வேண்டும். இலகு ரக லைசென்ஸ் எடுத்து குறைந்தது 3 ஆண்டு, லைசென்ஸ் பேட்ஜ் எடுத்து 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.டிரைவருக்கான சம்பளம் மாதம் ரூ.15,820. எழுத்து, தொழில்நுட்ப தேர்வு, நேர்காணல், கண்பார்வை திறன், மருத்துவம், சாலை விதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பதவிக்கு பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி., லைப் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.16,020 சம்பளம்.நேர்முக தேர்வன்று வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எழுத்து, உடற்கூறியல் முதலுதவி, நர்சு பணி, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 89259 41977 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை