உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் 106 கண்மாய்களுக்கு பெரியாறு தண்ணீர் வரவில்லை

சிவகங்கையில் 106 கண்மாய்களுக்கு பெரியாறு தண்ணீர் வரவில்லை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன கண்மாய்கள் 136ல் 106 கண்மாய்களுக்கு பெரியாறு தண்ணீர் வரவில்லை என பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு,லெசிஸ்,48வது மடை கால்வாய்,கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள்மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் மாணிக்கம் கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. பெரியாறு ஒரு போக பாசனத்தின் கடைமடை பகுதியாக இருப்பது சிவகங்கை மாவட்டமாகும். சிவகங்கை பகுதிக்கு செப்.19 தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 106 கண்மாய்களுக்கு பெரியாறு தண்ணீர் வரவில்லை என பாசன விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விவசாயி அய்யனார் கூறுகையில், பெரியாறு பாசன தண்ணீரை நம்பித்தான் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர். ஆனால் இதுவரை 20 கண்மாய்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஷீல்டு கால்வாயில் 3 கண்மாய்களுக்கும், லெசிஸ் கால்வாயில் 6, 48வது மடைக்கால்வாயில்4, கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 கால்வாயில் 7 கண்மாய்கள் என 20 கண்மாய்களுக்கு மட்டுமே இன்று வரை பெரியாறு தண்ணீர் வழங்கப்பட்டுஉள்ளது. மீதமுள்ள 106 கண்மாய்களுக்கு தண்ணீர் கொடுக்கப்படவில்லை. பெரியாறு தண்ணீரை நம்பிதான் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது பெய்த மழை தண்ணீரை வைத்து பயிரை காப்பாற்ற முடியாது. எனவே தண்ணீர் வழங்காத அனைத்து கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை