| ADDED : நவ 18, 2025 04:11 AM
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்ப வனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்கா பிஷேகம் நடந்தது. புஷ்பவனேஷ்வரர் சன்னதி முன் லிங்க வடிவில் 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு பூஜை நிறைவடைந்து புஷ்பவனேஷ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. மானாமதுரை: மானா மதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபி ஷேகம் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்த வல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை முதலாவது சோம வாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீரால் சங்காபிஷேகம் நடைபெற்றது. மாலை நடைபெற்ற பிரதோஷ விழாவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்ஸவர் கோயிலை சுற்றி வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், சாலைக் கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் 108 சங்காபிஷேகம் நடை பெற்றது. திருப்புத்துார்: திருப்புத் துாரில் திருத்தளிநாதர் மற்றும் ஆதித்திருத்தளி நாதர் கோயில்களில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று முதல் சோம வாரத்தை முன்னிட்டு ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் மாலை 4:00 மணிக்கு பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாயார் களால் யாகசாலை பூஜைகள் துவங்கின. கலசம் மற்றும் 108 சங்குகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. யாகபூஜைகள் நிறை வடைந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் கலசம் மூலவர் சன்னதிக்கு புறப்பாடாகி அபிஷேகம் துவங்கியது, 108 சங்கா பிஷேகம் நடந்து அலங்காரத்தில் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. திருத்தளிநாதர் கோயிலில் மாலை 6:15 மணிக்கு நடராஜர் சன்னதி முன் சிவாச்சார்யார்களால் வெள்ளிக் கலசம் நிறுவி யாகசாலை பூஜைகள் துவங்கின. மூலவர் சன்னதி முன் நால்வர் மண்டபத்தில் 1 தங்க வலம்புரி சங்கு, 2 வெள்ளி இடம்புரி சங்குகள் பாலுடனும் மற்ற 108 சங்குகளில் பன்னீர் நிரப்பியும் அடுக்கப்பட்டன. யாகசாலை பூஜை களுக்கு பின்னர் சங்குகளில் இருந்த திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.