சிங்கம்புணரியில் 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகங்கை: சிங்கம்புணரியில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்திய 3 பேரை கைது செய்தனர்.குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிங்கம்புணரி வேட்டையன் பட்டி கண்மாய் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த காரை சோதனை செய்தனர். காரில் 24 மூடைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. காரின் உரிமையாளர் சிங்கம்புணரி அருகே மதுராபுரி வேங்கைப்பட்டியை சேர்ந்த கேசவன் 57, டிரைவர் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியை சேர்ந்த நடராஜன் 51, அரிசி சேகரித்து கொடுத்த வேட்டையன்பட்டி மகேந்திரன் 55, 3 பேரையும் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.