உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி  துறை அலுவலர்கள் 125 பேர் கைது 

மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி  துறை அலுவலர்கள் 125 பேர் கைது 

சிவகங்கை : சிவகங்கை, கல்லலில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 125 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊராட்சி செயலர் காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும். அரசின் இலவச வீடு திட்டத்திற்கென போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். கிராம ஊராட்சி, ஒன்றியங்களை பிரிக்க எதிர்ப்பு தெரிவிப்பது என்பது உட்பட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த மறியலுக்கு மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் துவக்கி வைத்தார்.சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் பெரியசாமி உட்பட நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ.,சஜீவ் தலைமையிலான போலீசார் 94 பேர்களை கைது செய்தனர்.கல்லல்: கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த மறியலுக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். தலைவர் காளிமுத்து, செயற்குழு வேல்முருகன், மாவட்ட பொருளாளர் குணசேகரன் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.இவர்களை கல்லல் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ