உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை : இளையான்குடி சாலைப்புதுார் பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., திபாகர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 40 மூடைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது. வாகன உரிமையாளர் டிரைவர் பள்ளத்துாரை சேர்ந்த சுப்பையா மகன் பழனியப்பன் 44, அரிசி கொண்டு வந்த பள்ளத்துார் சேக்முகமது மகன் அப்துல் ஹமீது இருவரையும் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்ட இளையான்குடியில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை