குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது
சிவகங்கை: கொலைவழக்கில் தொடர்புடைய சிவகங்கை, திருப்புவனத்தை சேர்ந்த இருவரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெரு ராஜேந்திரன் மகன் மாரிமுத்து 25. திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்திகணேஷ் 19. இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.