உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

சிவகங்கை ; சிவகங்கை மருதுபாண்டியர் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். மதுரை மாவட்டம் சமயநல்லுார் கண்ணன் மகன் அஜித் குமார் 28, சிக்கந்தர் சாவடி அப்பாஸ் மகன் அமர்நாத் 29, தல்லாகுளம் ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் 18 ஆகிய 3 பேரும் நின்றனர். அவர்களை விசாரித்ததில் அவர்களிடம் கவரில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ