உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் பொருள் வாங்க 2 கி.மீ., நடை பயணம்

ரேஷன் பொருள் வாங்க 2 கி.மீ., நடை பயணம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே ரேஷன் கடைக்கு பொருள் வாங்க கிராமத்தினர் 2 கி.மீ.,துாரம் நடந்து சென்று வீண் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வொன்றியத்தில் மருதிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அரளிப்பட்டி, சிங்கமங்கலப்பட்டி கிராமங்களுக்கான ரேஷன் கடை மருதிபட்டியில் செயல்படுகிறது. அரளிப்பட்டி, சிங்கமங்கலப்பட்டி கிராம மக்கள் போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் ரேஷன் பொருள் வாங்க 2 கி.மீ., நடந்து வந்து பொருள் வாங்கி செல்ல வேண்டி உள்ளது. சிலர் ஆட்டோக்களில் கூடுதல் பணம் கொடுத்து சென்று வருகின்றனர். தங்களுக்கான கடையை அரளிப்பட்டியில் அமைத்தால் அலைச்சலும் நேர விரயமும் குறையும் என அப்பகுதி மகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அரளிப்பட்டி, சிங்கமங்கலப்பட்டி கிராம குடும்ப அட்டைதாரர்களுக்காக அரளிப்பட்டியில் தனியாக பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை