உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிராவயல் மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர் பலி

சிராவயல் மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர் பலி

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகேயுள்ள சிராவயலில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. 225 காளைகள் பங்கேற்றன; 121 பேர் மாடு பிடித்தனர்.மாடுகள் குத்தியதிலும், மாடுகளைப் பார்த்து பயந்து கீழே விழுந்ததிலும் 125க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வேடிக்கை பார்த்த கல்லல் ஒன்றியம் வலையப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் 12, என்ற சிறுவன், கல்லல் ஒன்றியம் மருதங்குடியைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த முத்துராமன் மகன் முத்துமணி, 32, ஆகியோர் மாடு முட்டி இறந்தனர்.

இளவட்ட கல் விழுந்து பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் பிரபு, 27, தச்சு வேலை செய்தார். இவர் நேற்று மாலை கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று, இளவட்ட கல்லை துாக்கியபோது, தவறி தாடையில் விழுந்து பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை