குளவி கொட்டியதில் 20 பேர் காயம்
சிவகங்கை: சிவகங்கை அருகே வெட்டிக்குளத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்றவர்களுக்கு, குளவி கொட்டியதில், 20 பேர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் 25. இவரது குலதெய்வ கோயில் சிவகங்கை அருகே வெட்டிக்குளத்தில் உள்ளது. தனது குழந்தைக்கு மொட்டை எடுக்க, உறவினர்களுடன் நேற்று வருகை தந்திருந்தார். கோயில் முன் உள்ள மரத்தடி நிழலில் பொங்கல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தில் இருந்த மலைக்குளவி அங்கிருந்தவர்களை கொட்டியது. இதில் மதுரையை சேர்ந்த பால்ராஜ் 40, பாலசுந்தர் 25, சத்தியா 40, குமார் 50, கருப்புச்சாமி 40, வேன் டிரைவர் முத்துக்குமார் 40, மற்றும் இரு குழந்தைகள் உட்பட 20 பேர் காயமுற்று, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.