உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொல்லங்குடியில் 21 ஜோடிக்கு திருமணம்

கொல்லங்குடியில் 21 ஜோடிக்கு திருமணம்

சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 21 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடந்தது.அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன் வரவேற்றார். ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பாரதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் 21 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். 21 ஜோடிகளுக்கும், சீர்வரிசை பொருள் வழங்கப்பட்டன. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் புவனேஸ்வரி, உறுப்பினர் ஜெயமூர்த்தி, அறங்காவலர் சந்திரன், ராணி, ஊராட்சி தலைவர் மெய்ஞானமூர்த்தி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான் பங்கேற்றனர். ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் ஞானசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை