உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தேவகோட்டையில் வண்டி பந்தயம் 217 ஜோடி மாடுகள் பங்கேற்பு

 தேவகோட்டையில் வண்டி பந்தயம் 217 ஜோடி மாடுகள் பங்கேற்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் இளைஞர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், துாத்துக்குடி, தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த 217 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடுகள் பிரிவில் 29 ஜோடி, நடுமாடு பிரிவில் 78 ஜோடிகள், சின்னமாடுகள் 110 ஜோடிகளாக பங்கேற்றன. ஆறு பிரிவாக போட்டி நடத்தப்பட்டு, முதல் நான்கு இடம் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர். இப்போட்டி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணங்கோட்டையில் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ