மேலும் செய்திகள்
வீட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ.4 லட்சம் திருட்டு
27-Aug-2025
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் பிரியாணி கடை மாஸ்டர். நேற்று சரவணன் கடைக்குச் சென்றதும், மனைவி சுமதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோப்புக்கு சென்றார். மதியம் 12:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2025