உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பாதரக்குடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கள் பழனிக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் தேவகோட்டையில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூடைகள் 27 டன் வரை இருந்ததை கண்டறிந்தனர். அதன் டிரைவர் பாதரக்குடி அருண்பாண்டியிடம்26, விசாரித்தனர். தேவகோட்டையில் இருந்து அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசிமூடைகளுடன் லாரியை பறிமுதல் செய்து, குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். டிரைவரிடம் மேல்விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ