உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கல்லுாரியில்  290 பேர் சேர்க்கை ஜூன் 2 முதல் கவுன்சிலிங் 

மானாமதுரை கல்லுாரியில்  290 பேர் சேர்க்கை ஜூன் 2 முதல் கவுன்சிலிங் 

சிவகங்கை: மானாமதுரை அரசு கல்லுாரியில் இக்கல்வி ஆண்டில் 5 பாடப்பிரிவுகளில் 290 மாணவர்கள் வரை சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூன் 2 முதல் 16 வரை நடைபெறுகிறது.தமிழகத்தில் புதிதாக 11 அரசு கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின் மே 29 ல் துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருபாலர் அரசு கல்லுாரி துவக்கப்பட்டுள்ளன.தற்போது செய்களத்துாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் தற்காலிகமாக இந்த கல்வி ஆண்டு முதல் கல்லுாரி செயல்பட உள்ளது. முதற்கட்டமாக இக்கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு மட்டுமே 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர். மற்ற அனைத்து பிரிவுக்கும் தலா வகுப்பிற்கு 60 மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக இக்கல்வி ஆண்டில் மானாமதுரை அரசு கல்லுாரியில் 290 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.இக்கல்லுாரிக்கு முதல் கல்வி ஆண்டில் பாடம் எடுக்க முதல்வரின் கீழ் துறைக்கு ஒரு பேராசிரியர் வீதம் 5 பேராசிரியர், அலுவலக பணிக்கு 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, மகளிர் கல்லுாரிகளில் அதிகளவில் மாணவர்கள் மானாமதுரையில் இருந்தே வந்திருந்தனர். இனி அவர்களுக்கு மானாமதுரையில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

இக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 2 ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கும். அன்றைய தினம் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நடத்தி, சீட் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ஜூன் 5, 9 மற்றும் 16 ம் தேதிகளில் பொது பிரிவினருக்கு 3 கட்டமாக மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் உள்ள செய்களத்துார் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெறும் என முதல்வர் (பொறுப்பு) கோவிந்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை